2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கிழக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்திற்கு கிழக்கு முதல்வர் விஜயம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

திருகோணமலையில் செல்வநாயகபுரம் வீதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்திற்கு  நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை விஜயமொன்றை  கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேற்கொண்டிருந்தார்.

இத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற தொழிற்பயிற்சிகள் மற்றும் முன்னேற்றம் தொடர்பாக மாகாண பணிப்பாளர் எஸ்.ஆர்.திலீபனிடம் அவர் கேட்டறிந்து கொண்டதோடு எதிர்காலத்தில் மேற்கொள்ள இருக்கின்ற பயிற்சி நெறிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்ற பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இங்கு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை தொழிற்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.ஆர்.திலீபன் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு வழங்குவதையும் முதலமைச்சர்   கைத்தறி நெசவு வேலைகளை பார்வையிடுவதையும் படத்தில் காணலாம்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் நவரெட்ணராஜா, பிரதம செயலாளர் வி.பி.பாலசிங்கம், பிரதி பிரதம செயலாளர் நிதி மயூரகிரிநாதன் ஆகியோரும் முதலமைச்சருடன் அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--