Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 20 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(வ.சக்திவேல்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் 350 விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இன்று மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் ஆரம்பமாகின்றது.
இன்று தொடக்கம் எதிர்வரும் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சைக்காக 5600 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றிலிருந்து முதற்கட்டமாக 150 பேரும் இரண்டாம் கட்டமாக 200 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் கலாநிதி.ஆர்.ருஷாந்தன் தெரிவித்தார்.
மேலும் கல்விப் பொதுத்தரம், உயர்தரம் என்பவற்றில் விவசாயபீடத்தில் சித்திபெற்று ஆங்கிலப் பாடத்திலும் சித்தி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
5 hours ago
24 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
24 Apr 2026