Kogilavani / 2010 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி, வேத்துச்சேனை, பிலாலிவேம்பு, 35ஆம் கொலனி, பக்கியல்ல, புது மும்மாரிச்சேனை, தும்பங்கேணி, விவேகானந்தபுரம் கல்லிக்காடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் யானைகளின் தாக்குதல்களால் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
யானைகளால் 200க்கும் மேற்பட்ட வீடுகள், ஆயிரக்கணக்கான தென்னைகள், பல ஏக்கர் வயல் நிலங்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல விவசாயத் தோட்டங்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. பலர் கொல்லப்பட்டும் உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடுகள் இதுவரை வழங்கப்படவில்லை என்பதுடன் வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை.
அத்துடன் இப்பிரதேசத்தில் சில இடங்களில் மின்சாரக் கம்பங்கள் நடப்பட்டு மின்கம்பி இணைக்கப்பட்டு மின் வழங்கப்பட்டிருந்தாலும் வீதிகளில் மின் விளக்குகள் இல்லை.
இரவுகளில் யானைகளின் தொல்லையை தொடர்ந்தும் அனுபவித்து வரும் இப்பிரதேச மக்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பியும் , மத்தளம் அடித்தும், தீப்பந்தங்களை எரிந்தும், பட்டாசு கொழுத்தியும் யானைகளை விரட்டி வருகின்றனர்.
இக்கிராமங்களில் வீதிகளில் மின் விளக்குகளைப் பொருத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய மின்பொறியியலாளர் அலுவலகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
13 minute ago
30 minute ago
34 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago
34 minute ago
47 minute ago