Super User / 2010 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(றிபாயா நூர்)
மட்டக்களப்பில் மக்கள் கலை இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலக பண்பாட்டடு அலுவலகம் இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் செயலக பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளார் வெலிக்கல உட்பட கலை இலக்கியவாதிகள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் நாட்டுக் கூத்து மற்றும் நாடகம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
நேற்று காலை ஆரம்பமான இம்மக்கள் கலை இலக்கிய விழாவில் கவிக்கூடல் ஆய்வரங்கம் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.
.jpg)
.jpg)
.jpg)
5 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
53 minute ago
1 hours ago