Janu / 2026 மே 03 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
"ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் மனிதநேயம் என்பது 'ஊருக்கு உபதேசம், உனக்கில்லையடி' என்பது போன்றதே," என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
"அண்மையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, போரின்போது மனிதநேயத்திற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், யுத்தத்தைத் தவிர்க்கச் சமாதானம் அவசியம் என்றும், தனது ஆட்சியில் மனிதநேயத்திற்கே முதலிடம் என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த உரை 'ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி ' என்ற பழமொழியையே ஞாபகப்படுத்துகின்றது. சகோதர இனமான தமிழ் மக்கள் கோர யுத்தத்தினால் பெரும் அழிவைச் சந்தித்து, தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு நீதி வேண்டி கடந்த 17 ஆண்டுகளாகப் பல்வேறு தளங்களில் போராடி வருகின்றனர். ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்தும், பாதிக்கப்பட்ட சகோதர இனத்தின் மீது எவ்வித மனிதநேயத்தையும் காட்டாத ஜனாதிபதி அநுர, அமெரிக்க - ஈரான் போர் தொடங்கியதும் மனிதநேயம் பற்றிப் பேசுகிறார்.
ஜனாதிபதி குறிப்பிடும் மனிதநேயம் உண்மையாகவே அவரிடம் இருந்தால், தமிழ் மக்கள் தொடர்பான பல பிரச்சினைகளில் நீதியின் கதவுகள் இன்னும் திறக்கப்படாமலேயே உள்ளன. குறிப்பாகத் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணி விவகாரங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் போன்றவற்றில் உண்மைகள் கண்டறியப்பட்டு, நீதி கிடைப்பதற்கான மனிதநேயம் வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இவை எவற்றிலும் ஜனாதிபதி அக்கறை கொள்ளவில்லை என்றால், அநுரவின் உரை என்பது ஊருக்கு சொல்லும் வெறும் உபதேசம் மட்டுமே," என்றார்.
11 minute ago
15 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
1 hours ago