Super User / 2010 செப்டெம்பர் 23 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
	.jpg)
(ஜவ்பர்கான்)
	மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில் அரசுக்குச் சொந்தமான உலர் உணவுப் பொருட்களை கடத்தி விற்பனை செய்ய முற்பட்ட கிராம சேவை அதிகாரி, பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர் மற்றும் சமாதான நீதிவான் ஆகியோரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் வீ.இராமகமலன் உத்தரவிட்டார்.
	
	நேற்று முன்தினம் வெல்லாவெளி செயலகப் ப்ரிவிற்குட்பட்ட 13ஆம் கொலணி, சங்கர்புரம் கிராமங்களைச் சேர்ந்த வறிய மக்களுக்கு வழங்குவதற்கு என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம்  விநியோகித்த அரிசி மற்றும் மாவினை பதுக்கி விற்பனை செய்வதற்காக ட்ரக்டர் வண்டியில் எடுத்துச் சென்ற போது வெல்லாவெளி பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போதே நீதவான் இந்த உத்தரவை வழங்கினார்.
15 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
2 hours ago