2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ்.)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீன்பிடித்துறையை அபிவிருத்திச் செய்யும் வகையில் புன்னைக்குடா, களுவன்கேணி, மற்றும் பாலையடித்தோணா ஆகிய பிரதேசங்களுக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்த மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், இந்திய முதலீட்டாளர்கள் சகிதம்  அப்பிரதேசங்களைப் பார்வையிட்டதுடன், மீனவர்களுடனும் கலந்துரையாடினார்.

இந்திய முதலீட்டாளர்களும் அமைச்சருடன் வருகை தந்து இப்பிரதேச மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அத்துடன், வாழைச்சேனையில் அமைக்கப்பட்டுள்ள மீன்பிடித்துறைமுகத்தைப் பார்வையிட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள், அதனை விரைவில் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் வகையில் மீனவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளும் வழங்குவதற்கான ஏற்பாடுகளில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விஜயத்தின்போது அமைச்சின் அதிகாரிகள், இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--