Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர்)
மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின் அதன் விளைவுகள் அது விட்டுச் சென்ற பாடங்கள் தொடர்பாக பல்வேறுபட்ட கலந்துரையாடல்களும் கருத்தாடல்களும் பல்வேறு நிறுவனங்களினாலும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் அதிகாரப் பகிர்வினூடாக சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் எனும் தலைப்பிலான கருத்தரங்கொன்றினை நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடத்தியது.
இதில் 18ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பாக பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல்த்துறை விரிவுரையாளர் ஜேஹநேசன் மற்றும் விரிவுரையாளர் சலீம், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு புலனாய்வு உத்தியோகத்தர் அஸீஸ் ஆகியோர் விரிவுரைகளை நடத்தினர்.
பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago