Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.எல்.ஜவ்பர்கான்)
தமிழ் மக்களின் அழிவிற்கும் அவல வாழ்க்கைக்கும் அரசாங்கம் மாத்திரம் காரணமல்ல எனவும் பிரதான பாத்திரம் ஐக்கிய தேசிய கட்சியே தான். அன்று ஐக்கிய தேசிய கட்சி தீர்வினை முன் வைத்திருந்தால் இன்று இவ்வாறானதோர் நிலை உருவாகியிருக்காது என தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தமிழ் மக்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கைக்கு பதிலளித்து இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அன்று அவ்வாறு தமிழ் மக்களை ஏமாற்றிய ஐக்கிய தேசிய கட்சி இன்று தமிழ் மக்களின் போராட்டம் முடிந்து விட்டதாக அறிக்கை விடுவது விந்தையானதாகும் எனவும் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகளின் அழிவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முடிந்து விட்டதாக திஸ்ஸ அத்தநாயக்காவினால் எவ்வாறு கூறமுடியும் என கேள்வியெழுப்பிய அவர், புலிகளின் ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்ததை நாங்கள் அங்கீகரிக்கின்றோம். ஆனால், தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. இந்த ஜனநாயக போராட்டத்தின் வெற்றியில் தான் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் அத்தநாயக்க போராட்டத்தின் முடிவுடன் எல்லாம் முடிந்து விட்டதாக கூறுவது எந்த வகையில் நியாயமாகும் எனவும் அவர் கூறினார்.
தமிழ் மக்களை நேசிப்பதாக காட்டும் ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறு கூறுவதன் மூலம், அதன் இரட்டை முகம் வெளிப்படுவதாகவும் பா.அரியநேந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
xlntgson Thursday, 30 September 2010 09:53 PM
தமிழர்தம் கடந்த காலங்களை உணர்ந்து திருந்த வழி ஏற்படும் போது அவர்களுக்கு நியாயத்தை செய்ய அரசு முற்படும் போது ஐதேக அரசியல் காரணங்களுக்காக பேரினவாதத்துக்குள் நுழைய முற்பட்டால் அக்கட்சி மேலும் பின்னிடைவை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. பிரபாகணேஷன், திகம்பரம், ஸ்ரீரங்க, ரவுப்ஹக்கீம் போன்றோர் ஆளும் கட்சிகளிலேயே இருக்க விரும்பிகிறார்கள் என்பதற்காக பெரும்பான்மை பௌத்த வாக்குகளை ஈர்க்க தமிழ், முஸ்லிம் விரோத பேச்சுகளை ஐதேக துவங்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால் சிங்கள பௌத்தர்கள் இம்முறை ஏமாறார் உறுதி.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago