2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

பஸ்லிருந்து ஜெலிக்னைற் குச்சிகள் மீட்பு

Super User   / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பிலிருந்து மூதூருக்கு சென்ற பஸ்ஸிலிருந்து சட்டவிரோத மீன்பிடிக்காக கொண்டு செல்லப்பட்டதாக கருதப்படும் ஜெலிக்னைற் குச்சிகளை வாகரை பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளனர்.

காயங்கேணி சோதனைச்சாவடியில் வைத்து இந்த ஜெலிக்னைற் குச்சிகளை கைப்பற்றியதாக வாகரை பொலிஸ் அதிகாரியொருவர் தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.

இக்குச்சிகளுக்கு எவரும் உரிமை கோரவில்லை எனவும் இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--