Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 02 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன் )
கிழக்கு மாகாணத்தில் கஸ்ட மற்றும் அதி கஸ்ட பிரதேச பாடசாலைகள் சகல பெளதீக வளங்களையும் பெற்று கல்வியில் முன்னேற்றமடைய வேண்டும் என்பதே கிழக்கு மாகாண முதலமைச்சரின் எதிர்பார்ப்பு என மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் கூறுகின்றார்.
நேற்று வெள்ளிக்கிழமை கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முறுத்தானை ஸ்ரீ முருகன் வித்தியாலத்தில் புதிய கட்டிடத் தொகுதியொன்றிற்கான வேலைகளை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
கிரான் பிரதேச செயலாளர் கே.தவராஜா, வாழைச்சேனை பிரதேச சபைத்தலைவர் தா.உதயஜீவதாஸ் மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கலந்து கொண்டார்.
அவர் தொடர்நதும் பேசுகையில், 'கிழக்கு மாகாணம் தற்போது கல்வியில் முன்னேற்றமடைந்து வருகின்றது. இம் மாகாணத்தின் கல்வியை மேலும் முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் தனது நிதியில் கூடுதலான நிதியை கல்விக்காக ஒதுக்கீடு செய்வது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட பிரதேசப் பாடசாலைகளை புனரமைப்பதற்கும் பல லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலதிகமாக பின்தங்கிய பிரதேசங்களை உள்ளடக்கி புதிதாக ஒரு கல்வி வலயமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 2011ஆம் ஆண்டுமுதல் செயற்படவிருக்கின்றது. பாடசாலைகளுக்கான பௌதீக வளங்களோடு மாத்திரம் நின்று விடாது ஏனைய வளங்களையும் பகிர்ந்தளித்து கல்வியிலே கிழக்கு மாகாணம் தனி இடத்தைப் பெற வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago