2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

இணைப்பு பஸ்சேவை ஆரம்பிக்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 04 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அனுருத்தன்)
 
மட்டக்களப்பு – கொழும்பு பகல் கடுகதி ரயில் பயணிகளின் நலன் கருதி மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து அக்கரைப்பற்று வரை இணைப்பு இ.போ.சபை பஸ் சேவையொன்றை ஆரம்பிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா இ.போ.சபை தலைவரை கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,

“ முற்பகல் 10.30 இற்கு கொழும்புக் கோட்டையில் இருந்து புறப்படும் குறித்த கடுகதி ரயில், இரவு 8.00 மணிக்குப் பின்னரே மட்டக்களப்பை வந்தடைகின்றது. இந்த ரயிலில் பயணம் செய்யும் கல்முனை, அக்கரைப்பற்று உட்பட அம்பாறை மாவட்டப் பயணிகள் இணைப்பு பஸ்சேவையின்றி பல்வேறு கஷ்டங்களையும் சிரமங்களையும் எதிர்நோக்குகின்றனர்.
 
இந்நிலையில் மேற்படி இணைப்பு பஸ்சேவை பயணிகளின் நலன் கருதி ஆரம்பிக்கப்படல் வேண்டும்” என்று அக்கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .