A.P.Mathan / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள புதிய தபாலக கட்டிடங்களை தபால், தொலைத் தொடர்புகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கவுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா, பெரிய போரதீவு, மண்டூர் ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய தபாலக கட்டிடங்களையே அமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்.
இந்நிகழ்வில் தபால் தொலைத்தொடர்பு பிரதியமைச்சர் துமிந்த திஸாநாயக்க, அஞ்சல் மா அதிபர் திஸாநாயக்க, மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட அஞ்சல் அலுவலக அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் வி.புவனசுந்தரம் தெரிவித்தார்.
23 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago