Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 17 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
மேய்ச்சல் தரைக்கு என அடையாளங் காணப்பட்டுள்ள காணிப்பிரச்சினையை இனரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ எந்தவொரு தரப்பினரும் அணுகக்கூடாது. இப்பிரச்சினைக்கு இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சுமுகமான தீர்வொன்றைக் காண இருதரப்பும் முன்வரவேண்டும்' என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறினார்.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசசெயலகப்பிரிவில் கால்நடைகளின் மேய்ச்சல் தரைக்கு அடையாளம் காணப்பட்ட காணியில் முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான காணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம்களினால் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைக்கு தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை செங்கலடியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதலமைச்சர் சந்திரகாந்தன் மேலும் உரையாற்றுகையில்,
மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட காணிகள் காரணமாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் விவசாயிகள் சட்டரீதியான ஆவணங்களை முன்வைத்தால் அவர்களுக்கு மாற்று இடங்களில் விவசாயச் செய்கைக்கான காணி வழங்கப்படும்' என்றார்
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபைர் உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், ஏ.ரீ.மாசிலாமணி, நாகலிங்கம் திரவியம், ஏ.சி.கிருஸ்னானந்தராஜா, இரா.துரைரெட்னம், யூ.எல்எம்.முபின் மற்றும் கே.எல்.முகமட் பரீட் மற்றும் தமிழ், முஸ்லிம் விவசாயிகள் மற்றும் கால்நடை வளரப்போர் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
50 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
7 hours ago