2021 மார்ச் 01, திங்கட்கிழமை

பொலிஸ் நடமாடும் சேவை

Super User   / 2010 ஒக்டோபர் 17 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

 

மட்டக்களப்பு,  ஏறாவூர் பொலிஸாரினால் கிராம ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொலிஸ் நடமாடும் சேவை நேற்று  களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நடமாடும் சேவையின் போது அக்கிராம மக்களின் திருமண பதிவு, அடையாள அட்டைகளைப் பெறுதல் மற்றும் பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதிகளைப் பெறுதல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இந்நடமாடும் சேவையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், ஏறாவூர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அத்துலத் முதலி மற்றும் செங்கலடி உதவிப் பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Pஒலிஸ் பொதுமக்கள் நல்லுறவைப் பேணும் வகையில் பொதுமக்களுக்கு பொலிஸாரால் நுளம்பு வலை, தென்னங்கன்றுகள், அடுப்புகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணஙகள் என்பனவும் வழங்கப்பட்டன.

 

 


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .