Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி )
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி பேரலையின்போது, தாய் மற்றும் தந்தையை இழந்த அநாதரவான பிள்ளைகளுக்கு அவர்களின் கல்வி நடவடிக்கை மற்றும் பராமரிப்பு என்பற்றிற்காக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மாதாந்த கொடுப்பனவை வழங்கவுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பிரதித்தலைவர் திருமதி இந்திரா நந்தவல்க தெரிவித்தார்.
இதற்காக பிள்ளைகளை தெரிவு செய்யும் நடவடிக்கை இன்று மட்டக்களப்பிலுள்ள சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அலுவலகத்தி;ல் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டது.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பிரதித்தலைவர் திருமதி இந்திரா நந்தவல்க மற்றும் அதன் நிகழ்ச்சிதிட்ட உதவியாளர்களான முகம்மட் றபியுத்தீன், செல்வி ஹசறா உட்பட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள சிறுவர் உள நல வைத்தியர்கள் இதில் கலந்து கொண்டு இந்த கொடுப்பனவுக்கான சிறுவர்களை தெரிவு செய்தனர்.
இவ்வாறு தெரிவு செய்யப்படும் பிள்ளைகளுக்கு முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபா வழங்கப்படுவதுடன் மாதாந்தம் 2500 ரூபா 21 வயது வரை வழங்கப்படுமென சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதி தலைவர் தெரிவித்தார்.
55 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026