Freelancer / 2026 ஏப்ரல் 25 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை நிதி அமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவி, இணைய குற்றவாளிகளால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அவதானத்தைச் செலுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பதிலளித்த சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகப்பேச்சாளர்,
வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி அமைப்புக்குள் அத்துமீறி நுழைந்ததை உறுதிப்படுத்தி நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையைத் தாம் அறிந்திருப்பதாகவும், இந்த முக்கிய நகர்வை மிக நெருக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு வழங்க வேண்டிய கடன் தவணையைச் செலுத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கை, தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் செயற்பட்டு வருகின்றது.
ஏற்கனவே 46 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்த முடியாமல் இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. R
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago