Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன், ஜிப்ரான், எம்.சுக்ரி)
மட்டக்களப்பு தாழங்குடா ஸ்ரீபெரியதம்பிரான் ஆலயத்தின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மணிக்கோபுரத்தை இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் .செல்வராஜா வைபவ ரீதியாக திரை நீக்கம் செய்து வைத்தார்.
.
சமூக சேவையாளர் வே.கந்தையா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்இ விசேட அதிதியாக உதவி பிரதேச செயலாளர் அ.தர்மகுலசேகரம் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா, 'நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியில் 10 சதவீதமான நிதியே மதம் சார்ந்த தேவைகளுக்கு ஒதுக்கீடு செய்ய முடியும். இது போதுமானதல்ல. இந்நிலையில் ஆலயங்களின் புனரமைப்பு பணிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள இந்து மக்கள் உதவ முன் வரவேண்டும். சுனாமியினாலும் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்ட ஆலயங்களை புனரமைப்பு செய்வதற்கு விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என மத விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சரான பிரதம மந்திரியிடம் கோரிக்கையொன்றை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளார்கள்..' என்றார்.
38 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
5 hours ago