2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

கிழக்கில் கிராம அபிவிருத்தி சங்க வலுவூட்டல் அலுவலர்களுக்கு பயிற்சி

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சிஹாரா லத்திப்)

கிழக்கு மாகாணத்தில் செயற்படும் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் செயற்பாடுகளையும் கிராம பயிற்சி நிலையங்களையும் வலுவூட்ட மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதன் பொருட்டு கிராம அபிவிருத்தி சங்கங்களையும், பயிற்சி நிலையங்களையும் வழிநடத்தும் கிராம அபிவிருத்தி அலுவலர்கள் மாதர் அபிவிருத்தி நிலையங்களின் போதனாசிரியர்களுக்கு முதல் கூட்டமாக கிராம அபிவிருத்தி தொடர்பாக விசேட பயிற்சிகளை தற்போது வழங்கி வருகின்றது.

இத்திட்டத்திற்கமைய கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்கும் போதனாசிரியர்களுக்கும் சமீபத்தில் மட்டக்களப்பு சர்வோதய பயிற்சி நெறி நடாத்தப்பட்டது.

இப்பயிற்சி நெறியில் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கூடாக நடைமுறைப்படுத்தப்படும் சுயதொழில் வாய்ப்பு திட்டங்கள,; சுழற்சி முறைக் கடன் திட்டங்களை சிறப்பாக அமுல் படுத்தவும் மாதர் பயிற்சி நிலையங்களில் நவீன முறையில் பொருட்கள் தயாரித்து சந்தைப்படுத்தல் பற்றியும் விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .