Super User / 2010 ஒக்டோபர் 30 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான், ரி.லோஹித்)
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி அஜித் நிவாட் ஹப்ரால், மீள் குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் ஆகியோர் இன்று மட்டக்களப்பு - உன்னிச்சைக்கு விஜயம் செய்து மக்களின் குறைபாடுகள் குறித்த உயர்மட்ட மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
காலை 10 30 மணிக்கு ஆரம்பமான உயர் மட்ட மாநாட்டில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி ஆகியவற்றின் கிழக்கு பிராந்திய முகாமையாளர்கள், பிரதேச செயலாளர்கள், மற்றும் பிரிகேடியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் மத்திய வங்கியின் நிதியுதவியில் இயங்கும் சர்வோதயம் உள்ளிட்ட பல அமைப்புகளின் பிரதி நிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இம் மாநாடு உன்னிச்சை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றுக்கொண்டுள்ளது. இம்மாநாட்டின் ஏற்பாடுகளை மத்திய வங்கியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் பத்மநாதன் மேற்கொண்டுள்ளனார். வரவேற்புரையினை வவுணதீவு பிரதேச செயலாளர் எல்.செல்வரெட்ணம் நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து மத்திய வங்கியின் ஆளுநர் மத்திய வங்கியினால் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தினைக் கையளிப்பதுடன், கடன் திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இக் கடன் திட்டங்களை உடனடியாக நிகழ்த்துவதற்காக மக்கள் வங்கியின் விசேட கிளையொன்று அமைக்கப்பட்டுள்ளது.



38 minute ago
9 hours ago
22 Nov 2025
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
9 hours ago
22 Nov 2025
22 Nov 2025