Super User / 2010 ஒக்டோபர் 30 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பிரதேசத்திலுள்ள கிரான் தேக்கஞ்சேனை எனுமிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடி மருந்துப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் சிலவற்றை இன்று நண்பகல் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் அவ்விடத்தை சோதனை செய்த போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ நிறையுடைய கிளைமோர் குண்டு மற்றும் சி.4 எனப்படும் ஒரு கிலோ நிறயுடைய வெடி மருந்துப் பொருட்கள், ரி56 ரக துப்பாக்கி ரவைகள் 183, ரி56 ரக துப்பாக்கி மெகசீன் ஒன்று, வோக்கி டொக்கி ஒன்று என்பன கணடெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வெடி மருந்துப் பொருட்கள் ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துப் பொருட்கள் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago