2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

கரடியனாறில் நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 01 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சிஹாரா லத்தீப், ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனைப் பகுதியில் நீர்வடிந்தோடும் வாய்க்கால் நீருக்குள் மூழ்கிய நிலையில் இளம் குடும்பஸ்தரொருவரின் சடலமொன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கரடியனாறுப் பகுதியில் கட்டிட நிர்மாண வேலை செய்யும் பதுளை ஹாலிஎல ரொக்தனவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதான இரு குழந்தைகளின் தந்தையான சிவஞானம் என்று அழைக்கப்படும் பெரிய சாமிமுத்து சாமியின் சடலமே இவ்விதம் கண்டெடுக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றது.

இக்குடும்பஸ்தர் நேற்றிரவு கரடியனாறு மதுபானசாலையில் தமது சகதொழிலாளிகள் நால்வருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு தங்குமிடம் நோக்கி நடந்த சென்றபோதும் அவர்  தங்குமிடம் வந்து சேரவில்லையென்றும் இன்று குறித்த நீர்வாய்க்காலில் சடலமாக கிடப்பதை கண்டுபிடித்ததாக பொலிஸ் வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்னவின் ஆலோசனைக்கமைய கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்திவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .