2020 நவம்பர் 25, புதன்கிழமை

மட்டக்களப்பில் வறுமை குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 02 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை வடக்கு மற்றும் காத்தான்குடி பிரதேச செயலளார் பிரிவுகளிலுள்ள வறுமையான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் பொருட்டு  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.முபீனின் நிதி ஒதுக்கீட்டில் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மன்முனை வடக்கு பிரதேசதச செயலாளர் பிரிவிலுள்ள  மஞ்சந்தொடுவாய் 18ஆம், 19ஆம் வட்டார பிரதேசத்தில் மிக குறைந்த வருமானம் பெறும் 52 குடும்பங்களுக்கு சுயதொழில் மூலம் தமது வருமானத்தை உயர்த்திக் கொள்வதற்காக ஒரு குடும்பத்திற்கு 14 கோழிக்குஞ்சு வீதம் வழங்கிவைக்கப்பட்டன.

இக்கோழிக்குஞ்சுகள் வழங்கும் வைபவம் நேற்று  திங்கட்கிழமை நடைபெற்றது. இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.முபீன் மற்றும் பிரதேச விலங்கு மருத்துவரான வைத்தியர் ஏ.எல்எம்.ஹாதி, சமுர்த்தி முகாமையாளர் ஏ.எல்.எம்.சுல்மி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--