2020 நவம்பர் 25, புதன்கிழமை

ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவு அபிவிருத்திக் குழுக்கூட்டம்

Super User   / 2010 நவம்பர் 02 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்கான விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று மாலை கோரளை மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.எல்.அன்சார் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் சிறுவர் விவகார மகளிர் அபிவிருத்தி பிரதி அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஜவாஹிர்சாலி பிரதேச சபைத் தலைவர் கே.வி.எஸ்.ஹமீட் ஆகியோரும் கலந்து கொண்டு அபிவிருத்தி தொடர்பான விடயங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

கலந்துரையாடலின் போது விசேட நடைமுறை வேலைத்திட்டங்களும் எதிர்வரும் ஆண்டுகளில் நடைபெறவுள்ள வேலைத்திட்டங்களும் பற்றி ஆராயப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .