2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

வீதி விபத்தில் பிரதேச சபை உறுப்பினர் பலி

Super User   / 2010 நவம்பர் 05 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)


வாகரை பிரதேச சபை உறுப்பினர் நவரட்ணம் ருவேந்திரன் இன்றிரவு வாகன விபத்தொன்றில் உயிரிழந்தார்.


26 வயதான ருவேந்திரன் மேலும் இருவர் சகிதம் பயணம் செய்த மோட்டார் சைக்கிள், புதூர் கதிரவெளி எனும் இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது கற்கள் ஏற்றிச்சென்ற லொறியொன்றுடன் மோதியதால் அவ்விடத்திலேயே உயிரிழந்தார்.


இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவர் வாகரை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
 

இதேவேளை இவ்விபத்தினால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் விபத்துடன் தொடர்புடைய லொறியை தீக்கிரையாக்கியுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--