2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

வாழைச்சேனை பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் கைது

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனையில் இன்று சனிக்கிழமை காலை கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து குறித்த இடத்தினை பரிசோதனை செய்தபோதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது ஒரு கிலோ கிராம் 850  கிராம் அரைத்த கஞ்சா தூளும் 350 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சந்தேகநபர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.ஏ.ஜே.எஸ்.கொடிசிங்க தெரிவித்தார்.


 


 


  Comments - 0

 • karan Saturday, 06 November 2010 08:19 PM

  இது போன்ற நடவடிக்கைகளை விரிவுபடுத்தி கடும் தண்டனை வழங்கப்படவேண்டும்.

  Reply : 0       0

  xlntgson Monday, 08 November 2010 08:47 PM

  கஞ்சா நல்ல மூலிகை மருந்து இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கே உரித்தானது.
  ஆயுர்வேத மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது துஷ்பிரயோகம் என்பதே துஷ்பிரயோகமாக இருக்கும் போது நம்மால் ஒன்றும் பேச முடியாது.
  எல்லா மருந்துகளுமே நல்ல, பணம் பறிக்கும் எண்ணம் இல்லாத மருத்துவர்களால் கையாளப் படுமிடத்து ஒரு போதும் பிரச்சினை ஏற்படுவதில்லை.நேர்மை இல்லாதவிடத்து எல்லாம் பிரச்சினையே. அஜமாமிச லேகியம் சாப்பிட்டால் தான் குழந்தை உண்டாகும் என்றால் அந்தணரும் உண்ணலாமல்லவா?
  மனிதர்களுக்காகவே இவை எல்லாம். மனிதரை கொல்ல அல்ல.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .