2020 நவம்பர் 25, புதன்கிழமை

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் மூவர் கைது

Super User   / 2010 நவம்பர் 06 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

  (ஸரீபா)

அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி  மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த வாழைச்சேனை   நாசிவன்தீவு மீனவர்கள் மூவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட சட்ட விரோத வலைகளை வைத்திருப்போர் அவற்றை மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள காரியாலயத்தில்; ஓப்படைக்குமாறு காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.

அக்காலக் கெடு முடிவடைந்ததை அடுத்து சட்ட விரோத வலைகளை வைத்திருப்போரை கைது செய்யும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .