2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் வலது குறைந்தோருக்கு சக்கரநாற்காலி, மூக்குக்கண்ணாடி

Menaka Mookandi   / 2010 நவம்பர் 07 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் வலது குறைந்தோருக்கான சக்கர நாற்காலிகளும் மூக்குக்கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் சிலாபம் லயன்ஸ் கழகத்தினால் நேற்று சனிக்கிழமை  இச்சக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு லயன்ஸ் கழக மண்டபத்தில் தலைவர் ஏ.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் சிலாபம் லயன்ஸ் கழகத்தின் தலைவர் றொஸ்லி பெரேரா மற்றும் மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் பிராந்திய தலைவர் மனோகரன் மற்றும் செயலாளர் உட்பட சிலாபம் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் மட்டக்களப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வலது குறைந்த 10பேருக்கு இதன் போது சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டதுடன் வருமானம் குறைந்தோருக்கான மூக்குக்கண்ணாடிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--