Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 08 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகம் ஏற்பாடு செய்துள்ள குறுநாடகவிழா இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வுகள் எதிர்வரும் 14ஆம் திகதி வரை 41 நாடகங்கள் நிறுவகத்தின் இராசதுரை அரங்கில் மேடையேறவுள்ளதாக பல்கலைக்கழக நடன நாடகத்துறை தலைவர் எஸ்.விமல்ராஜ் தெரிவித்தார்.
நடன நாடகத்றையின் 3ஆம் வருட மாணவர்களின் படைப்புக்கள் மேடையேற்றப்படுகின்றன. சிறுவர் நாடகம், யதார்த்த நாடகம், சமூக நாடகம் உட்பட பலவகையான நாடகங்கள்
இதன்போது அரங்கேற்றப்படவுள்ளன. இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு முதலாவது நாடகம் அரங்கேறியது.
நடன நாடக பீட தலைவர் எஸ்.விமலநாதன் தலைமையில் இவ்விழா நடைபெறுகின்றது. மாணவர்களின் பரீட்சையை மையமாகக்கொண்டே இந்நாடங்கள் அரங்கேறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago