2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Super User   / 2010 நவம்பர் 09 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கடமையாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளுக்கான பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை வாகரை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

233ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் வீரகோனினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் 23ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொலிபஸ் பெரேரா தலைமை தாங்கி கல்வி, பொருளாதாரம், விவசாயம், வீதி அபிவிருத்தி, மின்சாரம், நூலகம் மற்றும் வாகரைப் பிரதேச அடிப்படைக் கட்டமைப்புக்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இதில் வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.இராகுலநாயகி பிரதேச சபை தவிசாளர் க.கணேசன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.குணலிங்கம் ஆகியேரர் கலந்து கொண்டனர்.

இங்கு உடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அவ்விடத்திலேயே காணப்பட்டது. தீர்வு காணப்படாத விடயங்களுக்கான  தீர்வுகளை பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு வந்து விரைவில் தீர்வு எட்டப்படும் என்றும் குறிப்பிட்டது.

இப்பிரதேசத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் எவராக இருந்தாலும் மக்களுக்கு சரியாகக் கடமையைச் செய்யாமல் துஷ்பிரயோகம் செய்வார்களாயின் அவர்களுக்கு எதிராக பாரதூரமான நடவடிக்கைகள் எடுப்பதற்கும் தயங்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--