Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
A.P.Mathan / 2010 நவம்பர் 10 , மு.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுசன்)
மட்டக்களப்பு படுவான்கரை பிரதேச, கோயில்போரைதீவு கிராமத்தில் நேற்று மாலை கடத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட 17 வயதுடைய யுவதியை இன்று அதிகாலை 1 மணியளவில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மீட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ரி.ஆர்.மானவடு, தமிழ்மிரருக்கு தெரிவிக்கையில்...
நேற்று மாலை குறித்த யுவதி கடைக்குச் சென்று திரும்புகையில் 21 வயதுடைய திருமணமான சந்தேகநபர் அவ்யுவதியை பலாத்காரமாக கடத்திச்சென்று வல்லுறவில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து எமக்குக் கிடைத்த இரகசிய தகவலில் பேரில் பாதிக்கப்பட்ட யுவதியை மீட்டதுடன் குற்றச்செயலில் ஈடுபட்ட இளைஞனையும் கைது செய்தோம். பாதிக்கப்பட்ட யுவதியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேலதிக வைத்திய உதவிக்காக அனுமதித்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.
மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
Fanam Wednesday, 10 November 2010 06:24 PM
இதில் ஈடு பட்ட நபரை சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வையுங்கள், எமது நாட்டில் கிடைக்கும் தண்டனை போதாது.
Reply : 0 0
xlntgson Thursday, 11 November 2010 09:00 PM
அதன் பின் நாங்கள் போராட்டம் செய்யலாம்
சரியாக விசாரிக்கவில்லை என்று பெரிய மனு ஒன்றில் எல்லாரிடமும் கையெழுத்து வாங்கி கருணை காட்டுமாறு கூறலாம்.
போதாக்குறைக்கு ஆங்கில இணையங்களில் அடிப்படைவாதி என்றும் பயங்கரவாதி என்றும் ஒருவரை ஒருவர் ஏசிக்கொள்ளலாம்.
பெண்களையே அரபுநாடுகளுக்கு அனுப்பக் கூடாது என்றும் அங்கே இருக்கும் மற்றவர்களுக்கு என்ன நடக்கும் என்ற கவலையில் பெற்றோரும் கதை நீண்டுகொண்டே போகும்.
மரண தண்டனைக்கு முன் சவுக்கால் அடிப்பதையோ குறைந்த பட்சம் பிரம்பால் அடிப்பதையோ ஏகோபித்த முறையில் செய்ய முடியுமா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
9 hours ago