Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 நவம்பர் 11 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுசன்)
ரஷ்யா – உக்ரேன் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் கல்விகற்றுவந்த மட்டக்களப்பு நொச்சிமுனையை சேர்ந்த சத்தியா வாமதேவன் என்ற 22 வயதுடைய மாணவி, கடந்த சனிக்கிழமை 6ஆவது மாடியிலிருந்து விழுந்து அகாலமரணமாகியிருந்தார். இவரது உடலம் இன்று இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு அவரது சொந்த இடமான நொச்சிமுனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக மரணமாகியவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். பதிவு திருமணம் செய்துகொண்ட சத்தியா தனது கணவருடன் ஒன்றாகவே ரஷ்ய பல்கலைக் கழகத்தில் கல்விகற்று வந்தார். இந்நிலையிலேயே கடந்த 6ஆம் திகதி சனிக்கிழமை அவர்கள் தங்கியிருந்த கட்டடத்தின் 6ஆவது மாடியிலிருந்து விழுந்து இறந்துள்ளார். கட்டடத்திலிருந்து தவறுதலாக விழுந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது பற்றிய விசாரணைகளை ரஷ்ய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மரணமாகிய சத்தியாவின் உடலம் தற்சமயம் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
2 hours ago