2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க தேவையில்லை- பொறுப்பதிகாரி எஸ்.வல்பொல

Super User   / 2010 நவம்பர் 13 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மீனவர்கள் தமது தேவைகள் தொடர்பாக பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளும் போது யாருக்கும் இலஞ்சம் வழங்கத் தேவையில்லை என காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.வல்பொல தெரிவித்தார்.

புதிய காத்தான்குடி ஜெய்லானி மீனவர் சங்கத்துடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்துடன் வெளிநாடு செல்ல விரும்புவோர் தமது பொலிஸ் நற்சான்றுதலை பெற்றுக் கொள்வதற்காக அந்தந்த கிராம உத்தியோகஸ்தர்கள் பிரிவுக்கென நியமிக்கப்பட்டுள்ள பொலிஸாருடன் தொடர்பு கொள்ளலாம். அதற்காக அஞ்சத்தேவையில்லை என்றார் அவர்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இச்சந்திப்பில் வல்பொல அவர்கள் மீனவர்கள் தொடர்பான பிரச்சனைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--