Menaka Mookandi / 2010 நவம்பர் 18 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
எதிர் வரும் 27ஆம்திகதி நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடடிக்கைள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இளைஞர் கழகங்களையும் அதன் உறுப்பினர்களையும் சந்தித்து ஆதரவு தேடி வருகின்றனர்.
இவ்விளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 5,000 இளைஞர் கழக உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மண்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அலுவலக ஊடக பிரிவின் பொறுப்பாளரும் இளைஞர் சேவை உத்தியோகத்தருமான முரளிதரன் தெரிவித்தார்.
இவ்விளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் 14 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 105 வேட்பாளர்கள் போட்டிடுகின்றனர்.
19 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago