Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
A.P.Mathan / 2010 நவம்பர் 19 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுசன்)
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் கடும் மழையின் காரணமாக ஆட்டோவொன்று தடம்புரண்டதில் அதில் பயணம் செய்த நால்வர் படுகாயமடைந்தனர். இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரு வயது குழந்தை உட்பட குறிப்பிட்ட ஆட்டோவில் நால்வர் பயணம் செய்துள்ளனர். மட்டக்களப்பு பிரதேசத்தில் கடும் மழை பெய்துவருவதனால் ஆட்டோ, வீதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டது. இதனால் ஆட்டோவில் பயணம் செய்த அனைவரும் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்களை உடனடியாக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
7 hours ago