2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

சிகிச்சை பலனின்றி யானை உயிரிழப்பு

Super User   / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

வாகரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான யானை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் சிகிச்சை பலனனின்றி இன்று காலை உயிரிழந்தது.

சில வாரங்களுக்கு முன்னர் கட்டுத்துவக்கினால் சுடப்பட்டதாக கருதப்படும் இந்த யானை கிரிமிச்சை பாலையடியோடையில் காயமடைந்து வீழ்ந்து கிடந்த நிலையில் கடந்த வியாழனன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் நேற்றுமுன்தினம் யானைக்கு சிகிச்சையளிக்க ஆரம்பித்தனர்.  எனினும் சுமார் 11 வயதான அந்த யானை இன்று காலை இறந்துவிட்டதாக வாகரை பொலிஸார் தமிழ் மிரருக்குத் தெரிவித்தனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--