2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பயிற்சி வகுப்புகள்

Super User   / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

கிழக்கு மாகாண முதலமைச்சரின் வழிகாட்டலில் கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பிரதேச செயலகம் தோரும் பயிற்சி வகுப்புக்களை கிழக்கு மாகாண இறைவரித் திணைக்களம் நடத்தி வருகின்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் தலைமையில் கேரளாவுக்குச் சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அங்குள்ள மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு செய்யும் திட்டங்களை ஆராய்ந்து கிழக்;கு மாகாணத்திலும் அமுல்படுத்தும் நோக்கில் இப் பயிற்சி வகுப்புக்களை நடாத்தி வருகின்றது.

'கேரளாவில் குடும்ப ஸ்ரீ திட்டம்' எனும் தொனிப் பொருளில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பு இன்று கோறளைப்பற்று மேற்கு (ஒட்டமாவடி)  பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஜவாஹிர் சாலி கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்துவைத்தார்.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் இருந்து ஒன்பது மாதர் சங்கங்கள் கலந்து கொண்ட இப்பயிற்சி வகுப்பில் பயனாளிகளுக்கான விளக்கங்களை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் நடாத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--