Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோகித்)
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு குற்றப்புலனாய்வுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஆசிரிய ஆலோசகராகவும் பிரதி அதிபராகவுமுள்ளவரின் வீட்டிலேயே இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தமது கடமைக்காக மேற்படி குடும்பத்தினர் வெளியில் சென்றவேளையில் அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திய திருடர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அலுமாரியிலிருந்த தங்க நகைகளை திருடியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு குற்றப்புலனாய்வுத்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
9 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
26 Oct 2025