2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

சுவாமி விபுலானந்தர் அழகியற்கலை கற்கை மாணவர்களின் பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்

Super User   / 2010 டிசெம்பர் 16 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான் )  

 
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தர் அழகியற் கலை கற்கைகள் நெறி நிறுவகத்தின் மூன்றாம் வருட மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமும் வகுப்பு பகிஷ்கரிப்பும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தில் முதலாம் வருட மாணவர்களுக்கும் இரண்டாம் வருட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பை விசாரணை செய்த பல்கலைக்கழக நிருவாகம் 7 மாணவர்களுக்கு ஒரு வருட கால கல்வித்தடையை விதித்தது.


இத்தடையை எதிர்த்தும் முரண்பாட்டுடன் சம்மந்தப்படாத இரு மாணவர்களின் தடையை முற்றாக நீக்குமாரும் ஏனைய ஐந்து பேரின் கல்வித்தடைக் காலத்தை குறைக்குமாரும் கோரி, கடந்த இரு நாட்களுக்கு முன் வகுப்பு பகிஷ்கரிப்பிலும் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
 
இதனால் பல்கலைக்கழக நிருவாகம்   இவ்விடயம் தொடர்பான விசாரணையை மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில் தமக்கு சாதகமான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்  மூன்றாம் வருட மாணவர்களால்  தொடர்ந்த ஆர்ப்பாட்டத்தையும் வகுப்பு பகிஷ்கரிப்பையும்  தற்காலிகமாக இடைநிறுத்தினர்.
 
தமக்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால் மீண்டும் இப்போராட்டம் மீண்டும் தொடரும் என மூன்றாம் வருட மாணவர்கள் தமிழ் மிரருக்குத் தெரிவித்தனர்.  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--