Kogilavani / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித், ஜிப்ரான்)
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் நகோஸி ஒகொன்ஜோ இவேலா (Ngozi Okonjo Iweala) இன்று சனிக்கிழமை பகல் வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தார்.
இங்கு விஜயம் செய்த அவர், பதில் உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார் மற்றும் பீடாதிபதிகள் , சிரேஷ்ட விரிவுரையாளர்களுடன் உயர்மட்ட சந்திப்பொன்றினை நடத்தினார்.
இச்சந்திப்பில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
உலக வங்கியின் முகாமைத்தவப் பணிப்பாளருடன், உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் மற்றும் செயற்திட்ட அதிகாரிகளும் கிழக்கு பல்கலைகழக விஜயத்தில் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு சுனாமி மீள்குடியேற்ற கிராமமான திராய்மடுவிற்கும் பணிப்பாளர் விஜயம் செய்ததுடன் உலக வங்கியின் கீழ் செயற்படும் நிறுவனங்களினால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சியையும் பார்வையிட்டார். திராய்மடு பகுதி மக்களின் தேவைகள் குறித்தும் அவர் கேட்டறிந்துக்கொண்டார்.
இதன்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளார் நிஹால் ஜெயவீர, மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், திறைசேரி உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago