2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் நிலக்கடலை விளைச்சல் அமோகம்;சந்தைப்படுத்த முடியாது பாதிப்பு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 20 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை நிலக்கடலை அமோக விளைச்சலைத் தந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் விளைச்சலில் கிடைத்த நிலக்கடலையை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து மீளக்குடியேறிய கொக்கொட்டிச்சோலை, வெல்லாவெளி, வவுணதீவு, வாகரை, தொப்பிகலை போன்ற பகுதிகளிலேயே நிலக்கடலை அதிகமாக செய்கை பண்ணப்பட்டுள்ளது.

தொப்பிகலை போன்ற நகரப்புறங்களிலிருந்து மிகவும் தூரத்திலுள்ள பகுதிகளில் செய்கை பண்ணப்படும் நிலக்கடலையை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.
 
செய்கை பண்ணப்படும் இடங்களில் ஒரு மரைக்கால் (36சுண்டுகள்) 100 ரூபாய்க்கே வியாபாரிகள் கொள்வனவு செய்கின்றனர். ஆனால் அவற்றை நகரப்பகுதிகளில் ஓருமரைக்கால் நிலக்கடலையை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்வதை அவதானிக்க முடிகின்றது.

உற்பத்தி செய்யப்டும் நிலக்கடலையை உரிய விலைக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம்; முன்வரவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--