2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் களைகட்டியுள்ள நத்தார் வியாபாரம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 21 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் நத்தார் வியாபாரம் மிகவும் களை கட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு நகரம், காத்தான்குடி, வாழைச்சேனை உட்பட பல நகரங்களில் வியாபாரம் நள்ளிரவுவரை இடம்பெற்று வருகின்றன.

அமைதியான சூழலில் இம்முறை நத்தார் மலர்வதால் நத்தாரைக் கொண்டாட கத்தோலிக்க மக்கள் குதூகலமாக  தயாராகி வருகின்றனர்.

வெளிமாவட்டங்களிலிருந்தும் அதிகமான வியாபாரிகள் இம்மாவட்டத்திற்கு வருகைதந்து தெருவோர வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

பலஇடங்களில் நத்தார் பண்டிகையை ஒட்டி விசேட கரோல் நிகழ்ச்சிகளும் பரவலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--