2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ.சு.க. அமைப்பாளரின் மெய்ப்பாதுகாவலர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 21 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் றவூப் ஏ. மஜீதின் மெய்ப்பாதுகவலரான ஊர்காவற்படை வீரரொருவர் இன்று செவ்வாய்க்கிழமை தாக்கப்பட்டு படுகாயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அசனார் முகம்மது யாக்கூப் (வயது 36) எனும் இவ் ஊர்காவற்படை வீரர், காத்தான்குடியிலிருந்து காங்கேயனோடை பிரதேசத்திலுள்ள அவரது வீட்டுக்கு இன்று பிற்பகல் 12.30 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது காங்கேயோடை 13, நாவலடி எனுமிடத்தில் வைத்து மூன்று பேர் வழிமறித்து வீதியில் வைத்து இவரை தாக்கியுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த மேற்படி ஊர்காவற்படை வீரர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி ஊர்காவற்படை வீரரை அப்பிரதேசத்திலுள்ள போதைவஸ்த்து வியாபாரிகள் சிலரே தாக்கியதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இவ் ஊர்காவற்படை வீரர் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதுடன் தொடர்ந்து விசாரணை நடாத்திவருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .