Suganthini Ratnam / 2011 ஜனவரி 09 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையால் அரைவாசிக்கும் மேற்பட்ட சனத்தொகையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வந்து பார்வையிடுமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தான் கோரியபோதிலும், சீரற்ற காலநிலை காரணமாக இன்றையதினம் தன்னால் வரமுடியாதென்றும் பிரதேச செயலாளர்களூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு தான் பணிப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கூறியதாக பொன். செல்வராசா தெரிவித்தார்.
இருப்பினும் எதிர்வரும் 14ஆம் திகதி மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை தான் வந்து பார்வையிடுவதாக தன்னிடம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்தாக பொன். செல்வராசா தெரிவித்தார்.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் அதாவது நேற்று காலை 8.30 மணியிலிருந்து இன்று காலை 8.30 மணிவரைக்கும் கிழக்கில் 312.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் கடந்த 3 மணித்தியாலங்களில் மாத்திரம் 100.4 மில்லிமீற்றர் மழைவிழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் கிழக்கு மாகாண வானிலை அவதான நிலைய அதிகாரி எஸ்.சிவதாஸ் தெரிவிக்கின்றார். இதேவேளை மணிக்கு 40 கிலோமீற்றர் என்ற வேகத்தில் பலத்த காற்று வீசிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025