2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

கிழக்கு உள்ளூராட்சி தேர்தல்:நியமன பத்திர தாக்கல் திகதியை நீடிக்க கோரிக்கை

Super User   / 2011 ஜனவரி 11 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நியமன பத்திரம் தாக்கல் செய்யும் திகதியை நீடிக்குமாறு தேர்தல் ஆணையாளரிடமும் அரசாங்கத்திடமும் வேண்டுகோள் விடுப்பதாக உள்நாட்டு வர்த்தக மற்றும் கூட்டுறவு பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாகவே நியமன பத்திரம் தாக்கல் செய்யும் திகதியை நீடிக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

 

 

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடமும் இது தொடர்பாக தான் கூறியதாக பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் குறிப்பிட்டார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நியமன பத்திரம் தாக்கல் செய்யும் திகதியை நீடிக்குமாறு தேர்தல் ஆணையாளரிடமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனும் கோரிக்கைவிடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X