Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 15 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களின் நன்மை கருதி மாவட்டத்தில் உள்ள பிரதேச வைத்திய குழுக்களினால் நடமாடும் மருத்துவ சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வாழைச்சேனை தள வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள விசேட அனர்த்த முகாமைத்துவ வைத்திய முகாம் மூலம் வைத்தியர்கள் பிரதேசத்தில் உள்ள அனைத்து நலன்புரி முகாம்களுக்கும் சென்று மருத்துவ சேவைகளை நடாத்தி வருகின்றனர்.
அத்துடன் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் முகாம்களுக்கு விஜயம் செய்து பொதுச் சுகாதார விடயங்களை கண்கானித்தும் வருகின்றனர்.
இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நலன்புரி முகாம்களில் உள்ள மக்களுக்கு இராணுவத்தினரும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.
கிழக்கு மாகாண கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் எம்.எஸ்.பி.பேரேரா தலைமையில் கோரளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாமில் உள்ள மக்களுக்கு அரிசி, சீனி, பருப்பு, பால்மா, போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago