2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெறுவது நிச்சயம்:எம்.எஸ்.சுபைர்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 24 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவது நிச்சயம் மட்டுமன்றி அவர்களே அதிகூடிய விருப்பு வாக்குகளையும் பெறுவரென கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
 
ஏறாவூர் நகர சபைக்கு போட்டியிடும் அ.இ.மு.கா.வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உறையாற்றும் போதே மேற்கண்டவாறு அமைச்சர் சுபைர் குறிப்பிட்டார்.
 
தொடர்ந்து உறையாற்றிய அமைச்சர், 'ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சியான அ.இ.மு.கா. அரசாங்கத்தின் பலமிக்க கட்சியாகவும், செல்வாக்கு மிக்க கட்சியாகவும் விளங்குகின்றது. மக்களின் செல்வாக்கு அதிகரித்த ஆதரவு எமக்கு இருப்பதாலேயே அரசில் இச்செல்வாக்கு கிடைத்திருக்கின்றது.
 
உள்;ராட்சி மன்றத்தேர்தலில் அ.இ.மு.கா.அனைத்து இடங்களிலும் போட்டியிடுகின்றது. போட்டியிடும் இடங்களிலெல்லாம் எமக்கு வெற்றி நிச்சயம் என்பதை இப்போதே உறுதியாகக் கூற முடியும்.

அ.இ.மு.கா. சார்பில் வெற்றிலைச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட பலர் முன்டியடித்து முன்வந்தமையானது தேர்தல் வெற்றியை உறுதி செய்கின்றது.
 
கட்சியின் தலைமைத்துவத்தின் தீர்க்கதரிசமான செயற்பாடுகளாலும், நம்பிக்கையான அனுகு முறையினாலும் அரசினதும், ஐனாதிபதியினதும் நம்பிக்கைக்குறிய கட்சியாக இன்று எமது கட்சி திகழ்கின்றது.
 
எனவே மக்கள் சக்தியுடன் ஆலமரமாக வளர்ந்திருக்கும் அ.இ.மு.காங்கிரசுக்கு வாக்களிப்பதன் முலம் அதிகளவு நன்மைகளையும், அபிவிருத்திகளையும், எட்ட முடியுமென்பதை பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்' என்றும் அமைச்சர் சுபைர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X