Kogilavani / 2011 பெப்ரவரி 15 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷhத் றஹ்மதுல்லா)
அராஜகம், அடாவடித்தனங்களின் மூலம் ஏறாவூர் மக்களின் வாக்குகளை சுவீகரிக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சுபைரின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவர் நேற்று முன்தினம் ஏறாவூரில் வைத்து மாற்றுக் கட்சியினரால் கடுமையாக தாக்கப்பட்டதை கண்டித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
எனது ஆதரவாளர் ஒருவர் எவ்வித காரணமுமின்றி தாக்கப்பட்டுள்ளமையானது என்னை மிகவும் கவலையில் ஆழ்தியுள்ளது. ஜனநாயக வழியில் அமைதியான முறையில் தேர்தலை முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் எமக்கு, இவ்வாறான அடாவடித்தனம் மிகுந்த ஆவேஷத்தை தோற்றுவித்துள்ளது. இருப்பினும் பொறுமையை கடைப்பிடித்து, அமைதி பேணுமாறு ஏறாவூர் மக்களை வேண்டிக் கொள்கின்றேன்.
ஏறாவூர் நகர சபைத் தேர்தல், சரித்தரம் படைக்கவிருக்கும் இத் தருணத்தில் அரசியல் வங்குரோத்து நிலைமை அடைந்துள்ள கட்சியொன்று அராஜகத்திளும் அடக்கு முறையிலும் கால்பதித்துள்ளது.
மார்ச் 17 ஆம் திகதி இந்த அராஜகத்துக்கு முற்றுப்புள்ளிவைக்க ஏறாவூர் மக்கள் தயாராகிவிட்டார்கள். ஜ.ம.சு.மு. ஏறாவூர் நகர சபையை கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது. இதனை உணர்ந்து கொண்ட வங்குரோத்து கட்சியொன்று மக்களின் வாக்குகளை சுவீகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஏறாவூர் மக்கள் என்மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கை நிச்சயம் பேணிப் பாதுகாக்கப்படும். அராஜகத்துக்கும் அட்டூழியத்துக்கும் எதிராக ஏறாவூர் மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். மார்ச் 17 ஆம் திகதி அதனை நிரூபிக்கத்தயாராகவுள்ளனர்.
36 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago