2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

வெள்ள நிவாரண முற்கொடுப்பனவு வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Super User   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஊழியர்கள் தமக்கு இதுவரை வெள்ள நிவாரண முற்கொடுப்பனவு வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று புதன்கிழமை காலை 9.30 மணி முதல் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக திரண்ட வைத்தியசாலையின் ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போதனா வைத்தியசாலை சிற்றூழியர் சங்கம், துணை மருத்துவர் சேவை சங்கம் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்தின் சுற்றுநிரூபத்தை மீறி வைத்தியசாலை நிர்வாகம் இந்த வெள்ள நிவாரண முற்பணத்தை வழங்க முற்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.

வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட நேரத்தில் தமது உயிரை துச்சமாகக்கொண்டு சேவை புரிந்தபோதிலும் , நிவாரணம் வழங்கும் தருணத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர்களாக சுமார் 330 பேர் கடமையாற்றும் அதேவேளை, துணை வைத்தியர் சங்கத்தில் 90க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.  ஆனால் வைத்தியசாலையில் கடமையாற்றும் 118 பேருக்கு மாத்திரம் வெள்ள நிவாரண முற்கொடுப்பனவு வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
அரசாங்கம் வெள்ள நிவாரண முற்பணம் வழங்குவதற்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்தபோதிலும், அதனை தமக்கு வழங்குவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாக சிற்றூழியர் சங்க தலைவர் ஏ.மரியசீலன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--