2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

'உயர் தர மாணவர்கள் பாடங்களை தெரிவு செய்யும் போது திட்டமிட்டு தெரிவு செய்ய வேண்டும்'

Super User   / 2011 பெப்ரவரி 26 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

உயர் தர வகுப்பு மாணவர்கள் தமது பாடங்களைத் தெரிவு செய்யும் போது பல்கலைக்கழகத்தையும் எதிர்காலத்தையும் திட்டமிட்டு பாடங்களை தெரிவு செய்ய வேண்டும் என மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளரும் தொழில் வழிகாட்டல் ஆலோசகருமான எஸ் தியாகராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மஹாஜன கல்லூரியில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற தொழில் வழிகாட்டல் ஆலோசனை  கருத்தரங்கில் விரிவுரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"பாடசாலை மாணவர்களின் நோக்கு பல்கலைக்கழகம் செல்வதாகவே இருக்க வேண்டும். அப்போது தான் எம்முடைய இலக்கு நிறைவேறுவதற்கான உந்து சக்தி நமக்கு கிடைக்கும்.

ஒவ்வொருவரும் உயர் தரத்தில் பாடங்களைத் தெரிவு செய்யும் போது தொழில் நோக்கத்தை மறந்து விடக்கூடாது" என்றார் அவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--